வில்லனாக நடிக்க ஆசைப்பட்ட ⭐விஷால்😯-இயக்குனர் 🎬மித்ரன்🎙

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬மித்ரன் இயக்கத்தில், ⭐விஷால் 💸தயாரித்து நடித்து கொண்டிருக்கும் படம் 🎥'இரும்புக்குதிரை'. இதில் 💃சமந்தா நடிக்கிறார், 🎹யுவன் இசையில் படம் உருவாகியுள்ளது😍. இந்நிலையில் 🎥இப்படம் பற்றியும், ⭐விஷால் பற்றியும் இயக்குனர் பேசியுள்ளார்👍. அவர் பேசியதாவது🎙, "இப்படத்தின் கதையை முதலில் விஷாலிடன் சொன்ன போது, கதை பிடித்திருந்தால் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கலாம் என்ற முடிவில் தான் கேட்டார். அதன் பிறகு கதை பிடித்துப் போக கதையில் நானே நடிக்கிறேன். ஆனால், வில்லனாக மட்டும் தான் நடிப்பேன் என்றார்.ஆனால், நான் அவரை நீங்கள் தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவருக்காக இப்படத்தின் நிறைய மாற்றங்கள் செய்தேன். அவரை மிலிட்டரி மேனாகவும் மாற்றினேன். சமூக வலைதளத்தில் நமக்கு தெரியாமல் நடக்கும் மர்மங்கள் பற்றியும், அதனால், ஏற்படும் விளைவுகள் பற்றியும் இப்படம் விரிவாக சித்தரிக்கும்" என்று தெரிவித்துள்ளார்🔈. மேலும், 🎥படத்தில் ⭐விஷாலை தவிர மற்ற கதாபாத்திரங்களை புதிதாக போடலாம்😳 என்று கூறியதற்கு ⭐விஷால் மறுப்பு🚫 தெரிவித்து, படத்தை பெரியளவில் பண்ணலாம்👍 என்று கூறியதாகவும் 🎬மித்ரன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get Kollywood on Whatsapp 💬