இன்று வெளியாகிய படங்களின் ஒரு பார்வை😍

  |   Kollywood

போங்கு : ⭐
படத்தின் ட்ரைலர் 📹https://goo.gl/9ScxLy
தாஜ் இயக்கத்தில்🎬 நட்டி நட்ராஜ், ருஹி சிங் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ள படம் 'போங்கு'. நட்டி நடராஜ் தன் நண்பர்களான அர்ஜுனன், ஹீரோயின் :danger:ருஹி ஆகிய மூவரும் ஒரே கார் கம்பெனியில் வேலை செய்யும் நண்பர்களாக வருகின்றனர். படம் முழுவதும் நட்டி நட்ராஜ் தான் வருகிறார், எனினும் அவர் நடிப்பு பொருந்தியுள்ளது என்றே கூற வேண்டும். ருஹி சிங் படம் முழுவதும் வந்தாலும் ஒன்றும் பெரிதாக மனதில் பதியவில்லை👎. காமெடி நடிகர்களில் சாம்ஸ் ஸ்கோர் அள்ளியுள்ளார்👏. வழக்கம் போல் ரௌடி மற்றும் போலீசுக்கு👮 இடையே நடக்கும் கதைக்களம் தான். சண்டை காட்சிகளில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை சற்று தவிர்த்திருக்கலாம். ஸ்ரீ காந்த் தேவாவின் இசை🎵 என்றாலும் பாடல்கள் ஒன்றும் கேட்கும் படி இல்லை. .
படத்தின் ஒளிபரபரப்பு நேரத்தை அறிய m5759 என டைப் செய்யவும்❗

'ஒரு கிடாயின் கருணை மனு' ⭐⭐⭐
படத்தின் ட்ரைலர் 📹https://goo.gl/TrQnvn
சுரேஷ் சங்கையா இயக்கத்தில்🎬 விதார்த், ரவீனா ரவி ஜோடியாக நடித்துள்ள படம் இது. திருமணம் முடிந்து தங்களது குலதெய்வத்திற்கு கிடாய்🐐 வெட்டி சாமி கும்பிடச்செல்லும் போது ஏற்படும் திருப்பங்களே படத்தின் கதைக்களம். விதார்த், ரவீனா ரவி உள்பட அனைவரின் நடிப்பும் சூப்பர். கிராமத்து மக்களின் நிஜ வாழ்க்கையை அனுபவித்தது போல் ஒரு உணர்வு🤔. படம் ஆரம்பித்த சில நிமிடங்கள், படத்தோடு ஒன்றி ரசிக்க முடியவில்லை. அதை தவிர வேறு ஒரு குறையும் இல்லை. மொத்தத்தில், 'ஒரு கிடாயின் கருணை மனு' நம்பி போய் பார்க்கலாம்.
படத்தின் ஒளிபரபரப்பு நேரத்தை அறிய m6054 என டைப் செய்யவும்❗

'7 நாட்கள்': ⭐
படத்தின் ட்ரைலர் 📹https://goo.gl/p3hMMr
மில்லியன் டாலர் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், கார்த்திக் மற்றும் கார்த்திகேயன் தயாரிக்க💰, அறிமுக இயக்குனர் V.R.கௌதம் இயக்கியுள்ள🎬 படம் '7 நாட்கள்'. P. வாசுவின் மகன் சக்தி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக நிகிஷா பட்டேல் மற்று அங்கனா ராய் நடிக்கின்றனர். 📽'உன்னைப் போல் ஒருவன்' படத்தின் மூலம் பிரபலமான 💪கணேஷ் வெங்கட்ராமன் இப்படத்தில் எதிர்மறை😈 கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களோடு எம்.எஸ்.பாஸ்கர், பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ராஜேந்தர் பாடிய பாடல்🎵 ஒன்று ஏற்கனவே வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை👏 பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஒரு கொலையை🔪 பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டிருந்தாலும், காதல்❤, காமெடி😂 என்று அனைத்தையும் இயக்குனர் சேர்த்துள்ளார். மொத்தத்தில், இப்படம், 7 நாட்களுக்கு மேல் ஓட வாய்ப்பு உள்ளது.
படத்தின் ஒளிபரபரப்பு நேரத்தை அறிய m6056 என டைப் செய்யவும்❗

📲 Get கோலிவுட் on Whatsapp 💬