✍கவிஞர் அப்துல் ரகுமான் காலமானார்😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

தமிழகத்தின் மிகச்சிறந்த கவிஞர்களில் அப்துல் ரகுமானும் ஒருவர்👍. 80 வயதாகும் இவர் இன்று அதிகாலை 2 மணியளவில், தான் இருந்த சென்னை பயூர் 🏠வீட்டில் காலமானார்😟. கவிஞர் அப்துல் ரகுமான், மதுரையில் 1937ம் ஆண்டு பிறந்தார்😯. இவரது தந்தையும், தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள்👍. இவர் கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்று, இலக்கண, இலக்கியங்களை கற்று, கவிதை எழுதத் துவங்கினார்👏. தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் கவிதை எழுதும்✍ திறமை உள்ள இவர் சமஸ்கிருதமும் பயின்றவர்😳. இவர் பால் வீதி, பித்தன், சுட்டு விரல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்😯. மேலும், இவர் கலைஞர் விருது, கலைமாமணி விருது🏆,பாரதிதாசன் விருது🏆என பல விருதுகளை வாங்கியுள்ளார்👍. கவிஞர் அப்துல் ரகுமானின் மகன் ✈அமெரிக்காவில் இருந்து வரவேண்டியது இருப்பதால், இறுதி சடங்கு நாளை மறுநாள் (ஜுன் 4ம்தேதி) நடக்கவிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬