🎥'நரகாசுரன்' படத்தில் இருந்து விலகினார் ⭐நாக சைதன்யா😱

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬கார்த்திக் நரேன் இயக்கும் 🎥'நரகாசுரன்' படத்தில் இருந்து விலகினார் நாக சைதன்யா😱. தற்போது அந்த கதாபாத்திரத்தில் 'மாநகரம்' சந்தீப் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது😳. 'துருவங்கள் 16' படத்திற்கு பிறகு 🎬கார்த்திக் நரேன் இயக்கும் படம் 🎥'நரகாசுரன்'. இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஷ்ரேயா சரண், மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்👍. இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் தெலுங்கு நடிகர் ⭐நாக சைதன்யா நடிப்பதாக இருந்தது. ஆனால், படப்பிடிப்புக்கான தேதிகள் ஒத்துவரவில்லை என்பதால் நாக சைதன்யா இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்😟. இது குறித்து இயக்குனர் 🎬கார்த்திக் நரேன் கூறுகையில்🎙, "நாக சைதன்யா மற்ற படங்களுக்காக ஏற்கெனவே தேதிகள் ஒதுக்கியிருப்பதைப் பற்றி எங்களிடம் சொன்னார். வேறெந்த பிரச்சினையும் இல்லை. எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தான்"என்று கூறினார்😯. மேலும், இந்த படத்தின் 📷போஸ்டர் வரும் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்றும் 🎬கார்த்திக் நரேன் கூறியுள்ளார்🎙 என்பது குறிப்பிடத்தக்கது😍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬