முதன்முறையாக கோவையில் தனியார் மூலம் தொழில் பூங்கா👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

தமிழகத்தில் முதன்முறையாக கோவையில் தனியார் மூலம் தொழில் பூங்கா அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது👍. தமிழகத்தில் சிறு தொழில் மற்றும் குறும் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் பெரும் தொழில் நிறுவனங்களான சிப்காட் போன்ற நிறுவனங்கள் எடுத்துள்ள முயற்சி தான் இந்த தொழில் பூங்கா😯. கோவையில் நடந்த ஒரு தொழில் கண்காட்சி விழாவிற்கு சென்ற எஸ்.பி.வேலுமணி இந்த அறிக்கையை தெரிவித்துள்ளார்🔈. தமிழகத்தின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை முதன்மைச் செயலர் மங்கத்ராம் சர்மா இது குறித்து அளித்த பேட்டியில்🎙, 'கோவை மாவட்டம் மோப்பிரிபாளையத்தில் 225 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் போன்ற உயர் தொழில் நிறுவனங்களுக்கான தொழில் பூங்கா வளாகம் அமைக்கப்பட உள்ளது. நிலத்தை வகை மாற்றம் செய்யவும், திட்டத்தை தொடங்கவும் ஒப்புதல் வழங்கியுள்ள தமிழக அரசு, முதல்கட்டமாக ரூ.10 கோடி நிதி அளிக்க உள்ளது. இந்த தொழில் பூங்காவில் சுமார் 350 நிறுவனங்கள் இடம் பெறும்', என்று தெரிவித்துள்ளார்🔈என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get Tamil News on Whatsapp 💬