🏦வங்கிகளில் இருந்து ரூ.2 லட்சத்தை💸 மொத்தமாக எடுத்தால் 100%அபராதம்😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏦வங்கிகளில் இருந்து ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான 💸தொகையை ரொக்கமாக பெறுவோருக்கு 100 சதவீத தொகை அபராதமாக விதிக்கப்படும்😳 என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது🔈. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது😱. இதையடுத்து பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டு அதற்கு பதில் புதிய ரூ.2000 நோட்டுகள் பொதுமக்கள் புழக்கத்துக்கு வினியோகிக்கப்பட்டன. 🏦வங்கிகளில் நடக்கும் பணபரிவர்த்தனைகள் குறித்து வருமான வரித்துறை 👮அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து கொண்டிருந்தனர்😯.
இதற்கிடையே, 🏦வங்கியில் இருந்து மொத்தமாக ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான தொகையை 💸ரொக்கமாக பரிவர்த்தனை செய்வதற்கு மத்திய அரசு தடைவிதித்ததை🚫 அடுத்து, அந்த திட்டம் 2017ம் ஆண்டு நிதி திட்டத்தின் அடிப்படையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வந்தது😳. தற்போது வருமானவரிச் சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கும்✍269-எஸ்.டி. பிரிவில் ஒரே நாளில் மேற்கண்ட 💸தொகையை ஒரே பரிவர்த்தனையாகவோ அல்லது ஒரு நிகழ்ச்சி தொடர்பான பரிவர்த்தனைக்கோ அல்லது தனிநபருக்கு அளிப்பதற்கோ தடைவிதித்துள்ளது🚫. இந்த சட்டத்தை மீறுவோருக்கு 100% அபராதமாக😳 அவர்கள் எடுத்த தொகையே, அபராத தொகையாக வசூலிக்க படும் என்று 💸வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது🔈.

📲 Get Tamil News on Whatsapp 💬