'விப்ரோ'💻 நிறுவனத்துக்கு வந்த மிரட்டல்😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

பெங்களூரில் பிரபல, 💻ஐ.டி., நிறுவனமான விப்ரோவுக்கு, மீண்டும் 500 💸கோடி ரூபாய் கேட்டு, 💻'இ - மெயில்' மிரட்டல் வந்துள்ளது😳. கடந்த மே.5⃣ம் தேதி, மர்ம நபர் ஒருவரிடமிருந்து, 'இ - மெயிலில்' மிரட்டல் வந்தது😯. அதில், '500 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்; இல்லையெனில், பயங்கர பின்விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்' என தெரிவிக்கப்பட்டு இருந்தது🔈. இது தொடர்பாக, பெல்லந்துார் 👮காவல் நிலையத்தில், புகார் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும், 'இ - மெயில்' மூலம், மற்றொரு மிரட்டல் வந்துள்ளது😳. இதில், '72 மணி நேரத்தில், 500 கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றால், உங்கள் அலுவலகத்தில் பயங்கரவாத சம்பவம் அரங்கேறும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது💻. இது தொடர்பான புகாரை, சைபர் கிரைம் 👮போலீசாருக்கு, பெல்லந்துார் 👮போலீசார் அனுப்பினர்👍.இரு மிரட்டல்களும், ஒரே 'இ - மெயில் ஐ.டி.,'யிலிருந்து வந்திருப்பதையும், சுவிட்சர்லாந்தின், ஐ.பி., முகவரி என்பதையும் சைபர் க்ரைம் கண்டுபிடித்துள்ளனர். மேலும், இந்த செயலை அந்த நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் ஊழியரோ அல்லது ஏற்கனவே வேலை செய்து கொண்டிருந்தவரோ தான் செய்திருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்🔈 எனப்து குறிப்பிடத்தக்கது😳.

📲 Get Tamil News on Whatsapp 💬