'ஜி.எஸ்.டி' முறை அமலுக்கு வந்தால் 🏅தங்கம் விலை உயரும்😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

33 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட உள்ளதால் 🏅தங்கத்தின் விலை வரும் நாட்களில் கணிசமாக அதிகரிக்கும் என்று நகை வணிகர்கள் தெரிவித்துள்ளனர்🔈. டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தங்கம், ஆயத்த ஆடைகள், காலணிகள் போன்றவற்றிற்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் இறுதி செய்யப்பட்டது😯. அதன்படி 🏅தங்கத்தின் மீது 3⃣% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட உள்ளது😱. இது ஏற்கனவே உள்ள வரியை விட 2⃣%அதிகம் என்பதால், தங்கத்தின் விலை கணிசமாக உயரும் என நகை வணிகர்கள் கூறியுள்ளனர்😳. மேலும் அவர்கள் கூறுகையில், வரி உயர்வால் கள்ளச்சந்தை விற்பனை மற்றும் தங்கம் கடத்தல் போன்றவையும் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளனர்😱. தங்கத்தின் மீதான ஜி.எஸ்.டி வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் 🏛மத்திய அரசுக்கு, நகை வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்🙏.
இதனை அடுத்து, ஜுலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் ஜி.எஸ்.டி வரி விதிப்பால், 500 💸ரூபாய்க்கு மேல் உள்ள காலணிகள் மற்றும் 1000 ரூபாய்க்கு💸 மேல் உள்ள ஆயத்த ஆடைகளின் விலையும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது😟.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬