ஜூன் 14ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை கூட்டம்👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

தமிழக சட்டசபை கூட்டம் வரும் ஜூன் 14ம் தேதி கூடுகிறது என்று சட்டசபை பொறுப்பு செயலாளர் பூபதி தெரிவித்துள்ளார்🔈. காலை 10 மணியளவில் கூடவிருக்கும் இந்த கூட்டத்தில், மானியம் குறித்த 🎙விவாதம் நடக்கக்கூடும் என்று தெரிகிறது😯. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கூட்டத்தில் 💸பட்ஜெட் மீதான 💸விவாதம் மட்டுமே நடந்தது😳. பின்பு, ஆர்.கே.நகர் 🗳இடைத்தேர்தல் காரணமாக கூட்டம் நிறைவு செய்யப்பட்டது😱. எனவே, இந்த கூட்டம் தற்போது கூட்டப்படுகிறது👍. மேலும், சட்டசபை அலுவல் கூட்டம் நடந்த பின்னரே இந்த கூட்டம் நடக்கும் என்றும், 30 முதல் 35 நாட்கள் வரை நடக்கவிருக்கும் இந்த கூட்டத்தில் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு துரையின் மானியத் தொகை குறித்த விவாதம்🎙 நடக்கும் என்றும் கூறப்படுகிறது😯. மேலும், இந்த விவாதத்திற்கு பின்னரே, 💸பட்ஜெட் குறித்த அறிக்கை வெளியிடப்படும்🔈 என்றும் தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬