🏔ஜம்மு காஷ்மீரில்,திருவண்ணாமலையை சேர்ந்த ராணுவவீரர் வீர மரணம் அடைந்தார்😱

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🏔ஜம்மு காஷ்மீரில், தீவிரவாதிகளுடன் நடந்த தாக்குதலில் திருவண்ணாமலையை சேர்ந்த ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்😟. திருவண்ணாமலையை சேர்ந்த ராணுவ வீரர் மணிவண்ணன் (24 வயது), இவரது தந்தை கோபால் (55) ஒரு விவசாயி🌱, இவரது அம்மா சின்னப்பொண்ணு (44), மணிவண்ணனுக்கு ஒரு தங்கை மஞ்சுளா மற்றும் தம்பி ஆனந்த் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் ராணுவ வீரர் மணிவண்ணன் வீரமரணம் அடைந்தார்😞. இந்நிலையில் ராணுவ வீரர் மணிவண்ணனின் உடல் டெல்லியில் இருந்து இன்று ✈விமானத்தில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது😯. மேஜர் மாம்கைன் தலைமையிலான ராணுவ வீரர்கள் உடலை பெற்று திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே உள்ள தேப்பனந்தல் கிராமத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, இன்று மாலை அவரது உடலுக்கு, முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது😟 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬