புது 🏛நீதிமன்றங்கள் அமைக்க ரூ659 💸கோடி நிதி ஒதுக்கீடு👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

தமிழகத்தில் புது 🏛நீதிமன்றங்களை கட்டவும், சீர் குலைந்த நிலையில் உள்ள கட்டிடங்களை சீர் செய்யவும் ரூ.659 கோடி 💸நிதியினை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது👍. மாநில அரசு புதிய நீதிமன்றங்களை உருவாக்கி, நீதிமன்ற கட்டடங்களை கட்டியெழுப்பவும், பொது மக்களுக்கு விரைவான நீதியை உறுதி செய்வதற்கு மற்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் இந்த 💸நிதி ஒதுக்கீடை செய்துள்ளது. சட்ட மன்றம், நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகளின் மந்திரி சண்முகம் அவர்கள், ஞாயிற்றுக்கிழமை சேலம் மாவட்ட 🏛நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்களின் சட்ட அரங்கங்கள், கூட்ட மண்டபம் மற்றும் சாப்பாட்டு அறை ஆகியவற்றின் 🏗கட்டுமானத்திற்காக அடிக்கல் நாட்டினார்👌. அப்போது அவர் கூறுகையில்🎙, 'ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 223கோர்ட்களை புதிதாக இயக்க முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து, 150 நீதிமன்றங்கள் இயங்க தொடங்கிவிட்டனர். மேலும், திருப்பூர், சத்துங்குளம், தென்காசி, தஞ்சாவூர், சிவகாசி, செங்கம், ஸ்ரீபெரும்புதூர், சிதம்பரம், ராஜபாளையம் உட்பட 11 நகரங்களில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான நிதி ரூ.155 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது', என்று கூறினார்😯. மேலும், சென்னையில் உள்ள 🏛உயர்நீதிமன்றம் ரூ.1.88 💸கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬