'பால் கலப்படம்' குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

அண்மையில் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் பால் நிறுவனங்கள் தயாரிக்கும் பாலில் கலப்படம் செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்🔈. இதனை அடுத்து, சென்னை 🏛உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது👍. இந்த வழக்கினை இன்று விசாரித்த நீதிமன்றம், இது குறித்து தமிழக அரசு 2⃣வாரங்களில் நீதிமன்றத்திற்கு பதில் அளிக்க வேண்டும் என்றும், இந்த பதிலினை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது⚖. மேலும், பாலில் கலப்படம் செய்யும் நிறுவனத்திற்கு எதிராக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன❓என்பது குறித்தும் அரசு கூறவேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது👍. இதனை அடுத்து, இந்த வழக்கின் விசாரணை வரும் ஜூன் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது⚖.
இந்த ⚖உத்தரவை அடுத்து, தமிழக அரசு தற்போது 🏛நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளது🔈. அதன் படி, தமிழக அரசு பால் கலப்படம் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவினை நியமித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது👍. மேலும், தற்போது தனியார் பால் நிறுவன உரிமையாளர்கள் 🏛நீதிமன்றத்தில் தங்கள் சார்பில் ஒரு கோரிக்கையை வைத்துள்ளனர்😯. அதன் படி, தனியார் நிறுவன பாலை சோதிப்பது போல், 'ஆவின்' நிறுவனம் தயாரிக்கும் பாலினையும் சோதிக்க வேண்டும்👍 என்று கேட்டு கொண்டுள்ளனர்🔈 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬