💸ஊழலில் முதல் இடம் வகிக்கிறது இந்தியா😟

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🌎ஆசியளவில் 💸ஊழல் மிகுந்த நாடாக இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது😟. ஜெர்மனியை சேர்ந்த 'ட்ரான்ஸ்பரென்சி இன்டர்நேஷனல்' என்னும் அமைப்பு ஊழலை உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளிலும் ஒழித்து விட வேண்டும் என்று பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்🎙.அந்த அமைப்பு சார்பில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 16 நாடுகளில் ஊழல் குறித்து சுமார் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் நேரடியாக கருத்துகள் கேட்கப்பட்டன🎙. கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது😯.
அதன் அறிக்கையில்🔈 69%மக்கள் அதாவது, 10ல் 7பேர் லஞ்சம் கொடுத்து மத்திய மற்றும் மாநில சலுகைகளை பெறுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது😱. இதனை அடுத்து, குறிப்பாக 📚கல்வி நிறுவனங்கள், பொது 🏥மருத்துவமனைகள், 👮போலீஸ் துறை, ⚖நீதித் துறை, 💸வரி ஆகியவற்றின் சேவைகளைப் பெற லஞ்சம் அளிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது😳. மேலும், பொது 🏥மருத்துவமனை சேவையைப் பெற 💸லஞ்சம் அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக 59 சதவீத இந்தியர்களும், 📚கல்வித் துறையில் லஞ்சம் கொடுத்தே சலுகை பெற்றதாக 58 சதவீத இந்தியர்களும் கூறியுள்ளனர்😱.இதில், 👮போலீஸ் முதலிடம் வகிக்கிறது. இதனை அடுத்து, ஊழல் மிகவும் குறைந்த நாடாக ஜப்பான் முதலிடத்தில் உள்ளது👍. அங்கு 0.2 சதவீத மக்கள் மட்டுமே லஞ்சம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்🔈. தென்கொரியாவில் 3 சதவீத மக்கள் மட்டுமே லஞ்சம் கொடுத்து அரசு சேவைகளைப் பெறுகின்றனர்😳 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬