கிண்டி வட்டாட்சியர் 🏢அலுவலகத்துக்கு 🔒பூட்டு போட்ட பொது மக்கள்😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

கிண்டி வட்டாட்சியர் 🏢அலுவலகம் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் அருகே செயல்பட்டு வருகிறது👍. கடந்த இரண்டு மாதங்களாக இந்த அலுவலகத்தில் வாட்டாட்சியர் மற்றும் அவருக்கு கீழ் வேலை பார்க்கும் எந்த பணியாளர்களும் 🏢அலுவலகத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது😯. இதனால் அனைத்து பணிகளும் நிலுவையில் உள்ளது😳. அது மட்டுமின்றி பட்டா வாங்கவோ,பட்டாவில் பெயர் மாற்றவோ அல்லது சாதி சான்றிதழ்📄 முதலியவை வாங்கவோ முடியாமல் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளார்கள்😞. இதனை அடுத்து, பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் 📜புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்😐. இதனால் தற்போது 😡ஆத்திரமடைந்த பொது மக்கள், அனைவரும் சேர்த்து எப்போதுமே 🔒பூட்டி கிடக்கும் கிண்டி வட்டாட்சியர் 🏢அலுவலகத்தை நாங்களே 🔒பூட்டு போடுகிறோம் என்று அலுவலகத்தை முற்றிலுமாக பூட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬