சென்னையில் கல் குவாரிகளில் இருந்து 3⃣கோடி லிட்டர் 🚰குடிநீர் விநியோகம்👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள கல் குவாரிகளில் இருந்து தினமும் 3⃣கோடி லிட்டர் 🚰குடிநீர் விநியோகம் செய்வதற்கான சோதனை ஓட்டம் துவங்கியது👍. தமிழகத்தில் இதுவரை காணாத வறட்சி இந்த வருடம் ஏற்பட்டுள்ளது😟. இதனால் 🚰குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டது😳. எனவே, குடிநீர் விநியோகத்திற்கு வேறு என்ன வழி உள்ளது என்பது குறித்து ஆலோசனை செய்த நிலையில், சென்னை புறநகர் சிக்கராயபுரம் பகுதியில் உள்ள 22 கல் குவாரிகளில் தேங்கியுள்ள நீரை, குடிநீராக விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது👍. அதற்காக அப்பகுதியில் சுமார் 3⃣கிமீ தூரத்துக்கு ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன👍.
இதுகுறித்து குடிநீர் வாரிய 👮அதிகாரி ஒருவர் கூறுகையில்🎙,"22 குவாரிகளில் தோராயமாக 3 ஆயிரம் மில்லியன் லிட்டருக்கும் அதிகமான நீர் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்து தினமும் 30 மில்லியன் லிட்டர் வீதம், 100 நாட்களுக்கு தண்ணீர் எடுக்க திட்டமிட்டுள்ளோம். இந்த நீர், செம்பரம்பாக்கத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விநியோகிக்கப்படும்." என்று கூறினார். மேலும் அவர் பேசுகையில், "இரு தினங்களில் கல் குவாரிகளில் இருந்து 30 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும். அப்போது, ஏரி நீரை எடுக்கும் அளவு குறைத்துக் கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்🔈என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬