நாளை சென்னை✈ திரும்புகிறார் ⭐ரஜினிகாந்த்😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎥'காலா' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சூப்பர்ஸ்டார் ⭐ரஜினிகாந்த் நாளை சென்னை திரும்புகிறார்👍. ரசிகர்களை மீண்டும் சந்திக்கவும் முடிவு செய்துள்ளார்😍. 10 நாட்கள் தொடர்ந்து மும்பையில் நடந்த 'காலா' படத்தின் படப்பிடிப்பினை முடித்து விட்டு சென்னை திரும்புகிறார் ரஜினி😯. இதனை அடுத்து, சில தினங்கள் ஓய்வு எடுத்த பின்னர், ரஜினி சென்னை படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இதற்கிடையே இந்த மாதம் நடுவில், அல்லது 3-வது வாரத்தில் ரஜினி மீண்டும் தனது விடுபட்ட மாவட்டங்களில் உள்ள ரசிகர்களை சந்திக்கவிருப்பதாக கூறப்படுகிறது😯. இந்த சந்திப்பின்போது ரஜினி அவரது அரசியல் பிரவேசம் பற்றிய ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பதில் அளிக்கலாம்🎙 என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது😕 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬