மாணவர் சேர்க்கைக்கு 4⃣மருத்துவ கல்லூரிகளுக்கு தடை🚫

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

தமிழகத்தில், உள்ள 4⃣மருத்துவ கல்லூரிகளில், 2017-18 மற்றும் 2018-19 ஆகிய ஆண்டுகளுக்கான மாணவர் சேர்க்கையை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது🚫. அன்னை மருத்துவக் கல்லூரி, பென்னலூர்- காஞ்சிபுரம் மேலும், மாதா மருத்துவக் கல்லூரி மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகியவை தற்போதைய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையினை தடை🚫 செய்துள்ளது😱.மேலும், கோயம்புத்தூர் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கழகமும் மாணவர் சேர்க்கையான தடையை தெரிவித்துள்ளது🔈. வழக்கமாக இந்த கல்லூரிகளில் ஆண்டிற்கு 150 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது😯. எனவே, மொத்தம் 600 இட ஒதுக்கீட்டினை மாணவர்கள் இழக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது😱.
இதனை அடுத்து, மத்திய அமைச்சகம் பாரத் பல்கலைக்கழகம் மற்றும் 🏥மருத்துவமனையில் வழக்கமாக 150 சீட்கள் மட்டுமே தேர்ந்தெடுக்க அனுமதி அளித்துள்ள நிலையில் தற்போது 250 சீட்கள் வரை சேர்க்க அனுமதி வழங்கியுள்ளது👍. மேலும், பாண்டிச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரியிலும், சேலத்தில் உள்ள அன்னபூர்ணா மருத்துவ கல்லூரியிலும் 150 சீட்கள் சேர்க்க அனுமதி வழங்கியுள்ளது😯. மேலும் அரசு மருத்துவ கல்லூரிகளில் 15% இட ஒதுக்கீட்டினை இந்தியா முழுவதும் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬