முன்னாள் திமுக எம்பி.இரா.செழியன் காலமானார்😱

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இரா.செழியன் (95) உடல்நல குறைவால் வேலூரில் காலமானார்😳. இவர் அரசியல்வாதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ✍எழுத்தாளர் என பல துறைகளில் வல்லமை பெற்றவர்👍. இவர் நிறைய சிறுகதைகள், நாடகங்கள் முதலியவற்றை எழுதியுள்ளார்✍. இவர் தனது மாணவர் காலத்திலேயே திமுக.வில் சேர்ந்து, அண்ணாதுரையிடம் நெருக்கமாக பழகியவர்😯. இதனை அடுத்து, இவர் 1962, 1967 நாடாளுமன்றத் 🗳தேர்தலில் வெற்றி பெற்றார். 1977ஆம் ஆண்டு தி.மு.க.விலிருந்து விலகி ஜனதா கட்சியில் சேர்ந்து இந்திய அரசியலில் ஈடுபட்டார்😯. 1978ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்👍. இதனை அடுத்து, 2001ம் ஆண்டு அரசியல் வாழ்க்கையிலுருந்து ஒதுங்கினார்😟. மேலும், இவர் ஒரு சிறந்த 🎙பேச்சாளராக இருப்பது மட்டுமல்லாமல் நன்கு அறியப்பட்ட இரு மொழி ✍எழுத்தாளர் ஆவார்👍. இதனால், இவர் அரசியலில் இருந்து வெளியேறிய பின்னர், அவர் வி.ஐ.டி.பல்கலைக்கழகத்தில் கௌரவ பேராசிரியராக இணைந்தார்👍. மேலும் இவர் மொரார்ஜி தேசாய், ஜெயபிரகாஷ் நாராயண், வாஜ்பாய், சோம்நாத் சாட்டர்ஜி போன்ற தலைவர்கள் வாழ்ந்த காலகட்டத்தை சேர்ந்தவர்👍 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬