கொடநாடு கொலை வழக்கில் ⛓கைதான சயான் மீண்டும் 🏥மருத்துவமனையில் அனுமதி😳

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு 🏠பங்களாவில் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக 👮போலீசாரால் ⛓கைது செய்யப்பட்ட சயான் நேற்று மீண்டும் 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்😳. கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி நள்ளிரவு காவலாளி ஓம் பகதூர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்😱. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், ஏப்ரல் 30ஆம் தேதி கேரள மாநிலம் பாலக்காடு அருகே நிகழ்ந்த 🚗கார் விபத்தில் படுகாயமடைந்தார்🤕. இதில் மனைவி, குழந்தைகள் மரணமடைந்தனர்😟. மேல் சிகிச்சைக்காக கடந்த மே மாதம் 13ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பூரண குணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து🔈, நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்😯. உடனடியாக கோத்தகிரி 👮போலீஸார் சயானை கைது செய்தனர்👍. எஸ்டேட்டில் கொலை சம்பவம் குறித்து சயான் செயல் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது😯. அதன் பின், கோத்தகிரி 🏛நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சயானை 15 நாட்கள் நீதிமன்ற ⛓காவலில் வைக்குமாறு உத்தரவு விடப்பட்டது⚖. இந்நிலையில், திடிரென்று நேற்று அவரது கையில் கடுமையான வலி ஏற்பட்டதால் மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்😱. தற்போது தான் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து கைது செய்யப்பட்ட சயான் மீண்டும் இப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬