சர்வதேச கைப்பந்து போட்டியில் வெள்ளி ட்ரோபியை வென்ற இந்திய அணி🎉

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

டஹிடியில் சர்வேதேச கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது👍. இதில்,இந்திய அணியை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் ராபின் அணியினர் பிரேசில் நாட்டிற்கு எதிராக விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்😯. மீனவ குடும்பத்தை சேர்ந்த வி.ரவி இளமையில் இருந்தே கைப்பந்து விளையாடுவதில் வல்லமை வாய்ந்தவர். இவரது பயிற்சியினை பெற்ற ராபின் மற்றும் அணியினர் கடந்த 3⃣ஆண்டுகளாக தொடர்ந்து கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டு நடந்த சர்வதேச போட்டியில் விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர். இதுகுறித்து ராபின் கூறுகையில், கடந்த 10 நாட்களாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் தங்கி பயிற்சி எடுத்து வந்ததாகவும், அடுத்த போட்டியில் முயற்சி செய்து முதல் இடத்தை பிடிப்போம் என்றும் நம்பிக்கையுடன் கூறியது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get Tamil News on Whatsapp 💬