பிளாஸ்டிக் அரிசியை தொடர்ந்து பிளாஸ்டிக் சர்க்கரை கண்டறியப்பட்டுள்ளது😱

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

பிளாஸ்டிக் அரிசியை தொடர்ந்து பெங்களூரில் பிளாஸ்டிக் சர்க்கரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்😱. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுவதை 📱வாட்ஸ் அப், 💻பேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிந்து கொண்டோம்👍. மேலும், இது உத்தரகாந்த் மாநிலத்தில் விற்பனைக்கு வந்தது. இதனை தொடர்ந்து தற்போது பெங்களூர் சந்தைகளில் பிளாஸ்டிக் சர்க்கரை புழக்கத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது😱. கர்நாடகாவின் ஹசன் பகுதியில் ஒரு பொது 🏬கடை உரிமையாளர் மீது பெங்களூரை சேர்ந்த சிவக்குமார் என்பவர் 📜புகார் செய்தார். விரைந்து வந்த உணவு பாதுகாப்பு துறை 👮அதிகாரிகள் சர்க்கரைகளை மாதிரி சோதனைக்கு எடுத்து சென்றுள்ளனர்😳. இதுகுறித்து கர்நாடக உணவு மற்றும் சிவில் விவகாரங்கள் அமைச்சர் யு.டி.காதர் கூறுகையில்🎙, "இது ஒரு பெரும் மோசடி போல் தோன்றுகிறது. விற்பனையாளர்களிடம் இருந்தும், வணிகர்களிடம் இருந்து பிளாஸ்டிக் சர்க்கரை கலந்து இருப்பதை கண்டுபிடித்துள்ளோம். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்." என்று தெரிவித்துள்ளார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬