விழுப்புரத்தில் முதல் சோலார் பேனல் நேற்று துவங்கப்பட்டது👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மேல்கூரைப் பகுதியில் 🌞சூரிய சக்தி மூலம் 60 கிலோ வாட் திறன் கொண்ட 🔌மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் இல.சுப்பிரமணியன், இந்திய தேசிய நெடுஞ்சாலை மண்டல அலுவலர் திரு.பி.எல்.மீனா ஆகியோர் நேற்று துவங்கிவைத்தனர்👏. இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இல.சுப்பிரமணியம் கூறுகையில்🎙, "சுங்கச்சாவடி மேற்கூரையில் சோலார் பேனல் அமைக்கப்பட்டு, சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிலையம் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் தினந்தோறும் 950 யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டதினால் 25 சதவிகிதம் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் 7.88 இலட்சம் செலவினம் குறைக்கப்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get Tamil News on Whatsapp 💬