ஈரானில் இருந்து 15 🐠மீனவர்கள் தமிழகம் வருகை👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

ஈரான் ⛓சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக 🐠மீனவர்கள் இன்று அதிகாலை தமிழகம் வந்தடைந்தனர்😍. ராமநாதபுரத்தை சேர்ந்த 15 மீனவர்கள் ✈துபையில் தங்கி 🐟மீன்பிடி தொழில் செய்து வந்தனர்😯. கடந்த ஆண்டு இவர்கள் எல்லை தாண்டி 🐟மீன் பிடித்ததாக கூறி ஈரான் 🌊கடற்படையினர் இவர்களை ⛓சிறை பிடித்து சென்றனர்😱. அதன்பின், இந்திய வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசின் தொடர் முயற்சியால் இவர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டனர்👍. இதனை அடுத்து, இன்று அதிகாலை ✈ஷார்ஜாவிலிருந்து 13 மீனவர்கள் சென்னைக்கும், 2 மீனவர்கள் திருச்சிக்கும் வந்தடைந்தனர்😯. தமிழகம் திரும்பிய இவர்களை அரசு 👮அதிகாரிகள் உள்பட இவர்களது உறவினர்களும் 😍உற்சாகத்துடன் வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬