🌎உலக முதன்மை பல்கலைக்கழகங்களில் இடம் பிடித்தது அண்ணா யூனிவர்சிட்டி👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🌎உலகின் முதன்மை பல்கலைக்கழகங்கள் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இடம் பிடித்து உள்ளது. கல்வி நிறுவனங்களில் பாடம் கற்பிக்கும் முறை, கல்வியின் தரம், ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் உலகமயமாக்கல் உள்ளிட்ட 6⃣முக்கிய அம்சங்களை கருத்தில் கொண்டு ✈இங்கிலாந்தை சேர்ந்த 'க்யூ.எஸ். வேர்ல்டு யுனிவர்சிட்டி ரேங்கிங்' என்ற நிறுவனம் ஆண்டு தோறும் உலகின் முதன்மை பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது😯. அந்த வகையில், 2018-ம் ஆண்டுக்கான பட்டியலை அந்த நிறுவனம் தற்போது வெளியிட்டு உள்ளது👍.சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட ஆய்வில் 959 பல்கலைக்கழகங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதில், 20 இந்திய பல்கலைகழகங்களும் அடங்கியுள்ளது👌.
இதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதல் முறையாக பட்டியலில், 651வது இடத்தை பிடித்து உள்ளது👏. இதேபோல் ஐதராபாத் பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், பிர்லா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, ஜாதவபூர் பல்கலைக்கழகம் ஆகியவையும் முதன் முறையாக இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬