🌊கடல்சீற்றத்தால் குமரி மாவட்ட வள்ளவிளையில் 60 வீடுகள்🏘பாதிக்கப்படும் நிலை😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வள்ளவிளை கிராமத்தில் 13 🏘வீடுகள் 🌊கடல் சீற்றத்தால் முற்றிலும் சேதமடைந்துள்ளது😱. மேலும், 60க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது😳. கடற்கரை கிராமமான வள்ளவிளையில் கடந்த 2⃣வாரங்களாக கடும் 🌊கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட அரசிடம் பலமுறை பொது மக்கள் 📜புகார் அளித்தும் அவர்கள் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது😳. இதுவரை மக்கள் தங்கள் சொந்த முயற்சியில் கற்களையும் மணல் மூட்டைகளையும் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது😯. அரசு தங்களுக்கு உதவி புரிய வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் 🙏வேண்டுகோளாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬