கால் சிலம்புடன் நியாயம் கேட்ட 👩பெண்😳

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

மதுரையில் 💍திருமணத்துக்கு மறுக்கும் காதலனுடன் சேர்த்து வைக்கக் கோரி, கால் சிலம்புடன் ஆட்சியரிடம் 📜புகார் கொடுக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது😳. மதுரை செல்லூர் சுயராஜ்ஜி யபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா (எ) பேபி (28). இவர் நேற்று கையில் சிலம்புடன் தலை விரி கோலமாக, தனது காதலனின் புகைப்படத்தோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு புகார் அளிக்க வந்திருந்தார்😱.
இதுகுறித்து இந்த பெண்மணி கூறுகையில்🎙, 'மதுரை கோவலன் நகரைச் சேர்ந்த ஒரு இளைஞரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்தேன். திருமணம் செய்து கொள்வார் என நம்பினேன். அவரது சகோதரிக்கு திருமணம் செய்தபின் என்னை திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்தார். ஆனால் தொடர்ந்து என்னை ஏமாற்றி வருகிறார். இது தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனக்கு கொலை மிரட்டல் விடுகிறார்'. என்று கூறினார்😳. மேலும், தனது காதலனுடன் தன்னை சேர்த்து வைக்குமாறு 🙏கோரிக்கையையும் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get Tamil News on Whatsapp 💬