💺சந்திரபாபு நாயுடுவின் அதிரடி திட்டம், லஞ்சமாக கொடுக்கப்பட்ட 💸பணம் 🏠வீடு தேடி வருகிறது👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வரும் 🇮🇳இந்தியா 💸லஞ்சம் ஒழிப்பதில் மட்டும் பின்னடைவு வகித்து வருகிறது😟. இந்த நிலையினை முறியடிக்க ஆந்திர முதலமைச்சர் 💺சந்திரபாபு நாயுடு ஒரு அதிரடி திட்டத்தினை அறிவித்துள்ளார்🔈. அது என்னவென்றால், "அரசு ஊழியர்கள் யாராவது லஞ்சம் கேட்டு அதை பொதுமக்கள் கொடுத்திருந்தால் உடனடியாக 1100 என்ற எண்ணுக்கு போர் செய்து விரிவான புகாரை அளிக்கலாம். அந்த புகார் உண்மையானது தான் என்கிற பட்சத்தில், பணத்தை வாகிய ஊழியரே புகார் அளித்த மக்களின் வீடு தேடி சென்று அந்த பணத்தை திருப்பி தருவார்"என்பதாகும்👍. அரசு ஊழியர்கள் கடுமையான தண்டனையிலிருந்து தப்பிக்கவே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது😯. இதுகுறித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில்🎙, "இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே இதுவரை 12 அரசு ஊழியர்கள் பணத்தை திருப்பி தந்துள்ளனர். முறையான விசாரணைக்கு பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்🔈.மேலும், இதுவரை 3000 லஞ்ச 📜புகார்கள் வந்து குவிந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது😱. இந்த திட்டம் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்பது மக்களது 🙏வேண்டுகோளாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬