டி.டி.வி.தினகரனுக்கு மீண்டுமொரு சிக்கல்🙁

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

அந்நிய செலவாணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது👍. இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில், ⛓கைதான டிடிவி தினகரன் கடந்த சில தினங்களுக்கு முன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்😯. இதனையடுத்து, கட்சிப் பணிகளை மீண்டும் தொடர்வேன் என அதிரடி பேட்டியும் கொடுத்தார்🎙. தொடர்ச்சியாக பழனிசாமிக்கு ஆதரவளித்த எம்எல்ஏ-க்கள் அனைவரும் அவரை சந்தித்து, தங்களின் ஆதரவை தெரிவித்து🔈 வந்ததால் டிடிவி-யின் செல்வாக்கு எம்எல்ஏ-க்கள் மத்தியில் உயர்ந்தது😯. இது ஒரு புறம் இருக்க, தன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் 🏛நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அப்போது டிடிவி தினகரன் மீது, இவ்வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது😳. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த🚫 டிடிவி தினகரன் தான் தவறு செய்யவில்லை என்று தெரிவித்தார்🔈. இதனையடுத்து இவ்வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை, வரும் 22 ஆம் தேதிக்கு நீதிபதி மலர்மதி ஒத்திவைத்தார்⚖. இது டிடிவி தினகரனுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது😟.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬