தினந்தோறும் நிர்ணயிக்கும் ⛽பெட்ரோலின் விலை💸, ஜூன்.16 முதல் அமலாகிறது😳

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

⛽பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் திட்டம் நாடு முழுவதும் வரும் ஜூன் 16ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது😳. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்தை பொறுத்து ⛽பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டன😯. இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய 3⃣எண்ணெய் நிறுவனங்கள் தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலையினை நிர்ணயம் செய்து வருகின்றனர்👍. 15 நாட்களுக்கு ஒரு முறை விலையில் மாற்றம் ஏற்படும் திட்டம் தான் தற்போது அமலில் உள்ளது👍. இதனிடையே, புதுச்சேரி, சண்டிகர், உதய்பூர், ஜாம்ஷெட்பூர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய 5⃣நகரங்களில் மட்டும் தினந்தோறும் 💸விலை நிர்ணயம் செய்யும் திட்டம் சோதனை முயற்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து தற்போது எண்ணெய் நிறுவனங்கள், தினந்தோறும் ⛽பெட்ரோல், டீசல் 💸விலை நிர்ணயிக்கும் திட்டம் நாடு முழுவதும் ஜூன் 16 முதல் அமலுக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬