மாசு கட்டுப்பாடு தலைவர்களுக்கு தடை🚫

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர்கள் செயல்பட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை🚫 விதித்துள்ளது. உத்தரகாண்ட மாநிலத்தை சேர்ந்த ராஜேந்திர சிங் என்பவர் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதில் சரியான வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை😱 என்று 🏛உயர்நீதிமன்றத்தில் வழக்கினை தொடர்ந்துள்ளார்😳. இந்த வழக்கினை கடந்த ஆண்டு பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது👍. அப்போது ஒழுங்காக விதிமுறைகளை மாசு கட்டுப்பாடு வாரியம் பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது⚖. இதற்காக 3⃣மாத கால அவகாசமும் அளிக்கப்பட்டது😯. இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கினை நீதிமன்றம் விசாரித்த போது, தமிழகம், கேரளா, ஹரியானா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்கள் புதிய விதிமுறைகளை வகுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது🔈. இதனால், குறிப்பிட்ட 10 மாநிலங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர்கள் செயல்பட தடை🚫 விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது⚖.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬