இரட்டை இல்லை🌱 சின்னம் லஞ்சம்💰 வழக்கு: சுகேஷின் ஜாமீன் மனு📑 தள்ளுபடி❌

  |   செய்திகள் / Kollywood

தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இடைத்தரகர் சுகேஷின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம்💰 கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா தரகராக செயல்பட்ட நரேஷ் என்ற நாதுசிங், லலித் பாபு பாய் ஆகியோரை டெல்லி போலீஸார்👮 கைது⚖ செய்தனர். இவர்கள் 5⃣ பேரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், டிடிவி தினகரன், மல்லிகார்ஜுனா, நரேஷ், லலித் பாபு ஆகியோருக்கு கடந்த வாரம் டெல்லி மாவட்ட நீதிமன்றம்⚖ ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கில் முதலில் கைது⛓ செய்யப்பட்ட சுகேஷின் ஜாமீன் மனு📑 தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடந்த 5-ம் தேதி அவரது வழக்கறிஞர் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இன்று சுகேஷுக்கு ஜாமீன் தர மறுத்த❌ நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬