சென்னை நீதிமன்றம்⚖: ஒரு வாரத்தில் ரஜினி⭐, ரஞ்சித்🎬 பதிலளிக்க வேண்டும்

  |   Kollywood

ரஜினி நடிக்கும் 'காலா'🎥 திரைப்படத்தை தயாரிக்க தடை🚫 விதிக்கக்கோரி சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில்⚖ வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த ஜிஎஸ்ஆர் விண்மீன் கிரியேஷன்ஸ் உரிமையாளரான கே.ராஜசேகரன், சென்னை பெருநகர 6 வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்📑 கூறியிருப்பதாவது:

"இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'காலா என்ற கரிகாலன்' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. கரிகாலன் படம் மற்றும் கதை தொடர்பாக கடந்த 1995 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்துக்குச் சென்று அவரை நேரில் சந்தித்து இதுதொடர்பாக பேசியுள்ளேன்."
"கடந்த 1996-ம் ஆண்டில் சென்னை பாம்குரோவ் ஹோட் டலில் இயக்குநர் கே.எஸ்.ரவிக் குமார் மூலமாக கரிகாலன், உடன் பிறவா தங்கச்சி ஆகிய படத் தலைப்புகளை வெளியிட்டேன். கரிகாலன் என்ற தலைப்பு மற்றும் கதையின் மூலக்கரு அனைத்தும் என்னுடைய உருவாக்கம். மேலும் இந்த கரிகாலன் திரைக்கதையை வேறு பல சினிமா நிறுவனங்களின் தயாரிப்பாளர்களிடமும் கூறியுள் ளேன். என்னால் உருவாக்கப்பட்ட கரிகாலன் தலைப்பையும், கதையையும் தனுஷ், ரஞ்சித் ஆகியோர் அதற்கு மறுவடிவம் கொடுத்து தற்போது நடிகர் ரஜினிகாந்தை வைத்து ‘காலா என்ற கரிகாலன்’ என்ற படத்தை தொடங்கி உள்ளனர்."

ராஜசேகரன் 'காலா' என்ற தலைப்பையும் மற்றும் படத்தின் மூலக்கதையை பயன்படுத்த கூடாது என்றும் குறறிகிறார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை 6-வது உதவி உரிமையியல் நீதிபதி தமிழரசி, இதுதொடர்பாக பதிலளிக்க எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூன் 15-ம்📆 தேதிக்கு தள்ளி வைத்தார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬