மலேசியாவிற்குள் நுழைய✈ வைகோவுக்கு தடை🚫

  |   செய்திகள் / Kollywood

ஆபத்தானவர்கள் பட்டியலில் உள்ளதாக கூறி மதிமுக பொது செயலர் வைகோவை அனுமதிக்க மலேசியா மறுத்து விட்டது.
மலேசியாவில் உள்ள பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமியின் மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மதிமுக பொது செயலர் வைகோ அங்கு சென்றார்.

மலேசியாவில் வந்து இறங்கிய வைகோவின் பாஸ்போர்ட்டை பறிமுதல்😯 செய்து நாட்டிற்குள் நுழைய அதிகாரிகள்👮 அனுமதி மறுத்தனர்.
இது குறித்து அதிகாரிகள் வெளியிட அறிக்கையின் படி, மலேசியாவுக்கு ஆபத்தானவர்கள் பட்டியலில்📜 வைகோ பெயர் உள்ளதாகவும் அவர் விடுதலைபுலிகள் அமைப்பை சேர்ந்தவர் என்ன கருதுவாலும் அவருக்கு அனுமதி வழங்கவில்லை என்று கூறினார்கள். மேலும், வைகோவை தனியறையில் அமர வைத்தனர். வேறு நபர்கள் அவரை சந்திக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது❌.

இன்று(ஜூன் 9) இரவு 10.45 மணிக்கு வைகோ இந்தியாவுக்கு திரும்பி செல்லுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.