வெங்கட்பிரபுவின்🎬 அடுத்த இன்னிங்ஸ்‼

  |   செய்திகள் / Kollywood

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு🎬 தற்போது ஒரு புதிய முயற்சியை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்📢.

ஒரு நல்ல குறும்படம் தயாரிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை😃 என்றும் அது தற்போது கைகூடி வந்துள்ளதாக கூறியுள்ள வெங்கட்பிரபு, இந்த குறும்படம் குறித்த விரிவான தகவல்களை தனது சமூக💻 வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இப்படத்தை ஆர்.டி.குமார் இயக்கவுள்ளார். நடிகர் சம்பத் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள இந்த குறும்படத்திற்கு 🎵யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். 15 நிமிடங்கள்⏱ ஓடும் வகையில் தயாராகவுள்ளது. இந்த குறும்படத்தின் படப்பிடிப்பு மிகவிரைவில் தொடங்கவுள்ளது என்று வெங்கட் பிரபு தெரிவித்தார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬