விவசாயிகள் சென்னையில் போராட்டம்✊

  |   செய்திகள்

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகை முன்பு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்✊ நடத்தி வருகின்றனர்.

விவசாய கடனை தள்ளுபடி✋, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து🚫 என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

செய்தியாளர்கள்📰 மத்தியில் பேசிய அய்யாக்கண்ணு, வரலாறு காணாத அளவிற்கு தமிழ்நாட்டில் வறட்சி ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு வறட்சி நிவாரணம் கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில், மத்திய அரசு தமிழக அரசின் கோரிக்கையை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றி உள்ளது என்று குற்றம் சாட்டினார்😠.

📲 Get Tamil News on Whatsapp 💬