இலவச 🚰குடிநீர் வழங்க 🏬மால்களுக்கு உத்தரவு⚖

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

வாடிக்கையாளர்களுக்கு இலவச 🚰குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று 🏬வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களுக்கு பெங்களூரு மாநகராட்சி 📄சுற்றறிக்கை அனுப்பியுள்ளது😳. அதன்படி, பெங்களூரு யஷ்வந்த்பூர் 🏬மால் ஒன்றில் உள்ள உணவகத்தில் இலவசமாக 🚰குடிநீர் வழங்கப்படாததை எதிர்த்து🚫 பெங்களூரு மாவட்ட நகர நுகர்வோர் குறைதீர் மையத்தில் சுதா கட்வா என்பவர் வழக்கு தொடர்ந்தார்😯. இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் மன்றம், வணிக வளாகங்கள் மற்றும் தனியாக செயல்படும் உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு இலவச குடிநீர் வழங்கப்பட வேண்டும்👍 என்று உத்தரவிட்டிருந்தது⚖. இந்த உத்தரவை அடுத்து பெங்களூரு மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬