கார்த்தியின் அடுத்த 3⃣திரைப்படங்கள்👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

கார்த்தி தற்போது 🎥'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்து வருகிறார். 🎥'சதுரங்க வேட்டை' இயக்குனர் 🎬எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஆயுதபூஜை திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது😯. இந்நிலையில் இந்த படத்தை அடுத்து கார்த்தி, முதன்முதலாக விஷாலுடன் இணைந்து🎥'கருப்புராஜா வெள்ளை ராஜா' படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் 🎬பிரபுதேவா மிகக்குறுகிய காலத்தில் இந்த படத்தை இயக்கி முடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது👍. எனவே இந்த படமும் இவ்வருட இறுதிக்குள் வெளிவர வாய்ப்பு உள்ளது. இதனை அடுத்து, நேற்று சூர்யாவின் தயாரிப்பில் 🎬பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் தொடங்கி அடுத்த வருடம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது😯.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬