பிளாஸ்டிக் முட்டை சாப்பிட்டு இருவர் மயக்கம்😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

சினிமா தியேட்டரில் பிளாஸ்டிக் முட்டை பப்ஸ் சாப்பிட்ட இருவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதையடுத்து 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்😱. திருவள்ளூரைச் சேர்ந்தவர்கள் அஜித், சூர்யா. இவர்கள் மணவாள நகரில் உள்ள தியேட்டர் ஒன்றில் படம் பார்த்துக்கொண்டிருந்தனர்😯. இடைவேளையில், கேன்டீனில், முட்டை பப்ஸ் வாங்கி சாப்பிட்டனர். அடுத்த சில நிமிடங்களிலேயே வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து, படம் பார்க்க வந்தவர்கள், தியேட்டர் நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர்😳. பின்னர் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட இருவரையும் திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் அனுமதித்தனர்😯. அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது😟. இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் 👮முத்துக்குமார் கூறுகையில்🎙, இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர்கள் கண்டறியப்பட்டு, கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவர் என்று தெரிவித்தார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬