🚁ஹெலிகாப்டர் ரெக்கையில் சிக்கி ஒருவர் பலி😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் கோயிலுக்கு செல்லும் யாத்ரிகர்களின் வசதிக்காக ✈விமானத்துறை சார்பாக 🚁ஹெலிகாப்டர் சேவை இயங்கப்பட்டு வருகிறது👍. இந்நிலையில் இன்று யாத்ரிகர்கள் 5 பேரை அழைத்துக்கொண்டு ஹரிதுவார் நோக்கி புறப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று கிளம்பிய சில நொடிகளிலே நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்திற்குள்ளானது😱. இந்த விபத்தின் போது உயிரை காப்பாற்றிக்கொள்ள கீழே குதிக்க முயன்ற விமான பொறியாளர் ஹெலிகாப்டரின் ரெக்கையில் விழுந்து உயிரிழந்தார்😟. இந்த விபத்தில் விமானிகள் இருவரும் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்த நிலையில், பயணம் மேற்கொண்ட யாத்ரீகர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை👍. இது தொடர்பாக விமானத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬