🌱அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை கலைப்பு😱

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🌱அதிமுக அணிகள் இணைப்பு 🎙பேச்சுவார்த்தை குழு இன்றுடன் (ஜூன் 11) கலைக்கப்படுகிறது என முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கூறி உள்ளார்😳. நேற்று திருவேற்காட்டில் நடந்த அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா அணியின் சார்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் 🎙பேசிய முன்னாள் 💺முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா ⚰மறைவிற்கு பின்னர் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் அதிமுகவின் இணைப்பு இனி தேவை இல்லை❌ என்று பொது மக்கள் எண்ணுவதாக குறிப்பிட்டார்😯. மேலும், 'மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை குழு இன்றுடன் (ஜூன் 11) கலைக்கப்படுகிறது' என்றும் அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது😱.

இதனை தொடர்ந்து, பன்னீர் செல்வத்தின் இந்த முடிவினை மறு பரிசீலனை செய்யுமாறு அமைச்சர் ஜெயக்குமார் தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்😯. இதுகுறித்து, இன்று 📰செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார் கூறுகையில்🎙,"அதிமுகவின் நலன் கருதி இரு அணிகளும் இணைய வேண்டும். இரு அணிகளும் இணையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.இரு அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழு கலைக்கப்படுவதாக எடுத்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். பிரிந்த சகோதரர்கள் மீண்டும் ஒன்று சேர வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்🙏.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬