எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கினார் சசிகலா😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக எம்.எல்.ஏ.களுக்கு 💸லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 122 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வழங்கிய ஆதரவின் பின்னணியில் மாநில சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பு வாக்குகளை பெற்று வென்றார் எடப்பாடி😳. சட்டசபையில் நடந்த 🗳வாக்கெடுப்பின் போது, தென்னிந்திய சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். சரவணன், கோவத்தூர் ரிசார்ட்டிலிருந்து தப்பித்து, ஓ.பி.எஸ். அணிக்கு ஆதரவு தெரிவித்தார்👍. மேலும், ஓபிஎஸ் அணியின் ஆதரவாளாரான சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் கூறுகையில்🎙, சசிகலா தரப்பினர் ஒருவருக்கு ரூ.6 கோடி தருவதாக கூறினர். மேலும், ரொக்கமாக கொடுப்பதில் பிரச்சனை ஏற்படும் என்பதால் தங்கத்தை தருவதாகவும் சசிகலா கூறினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்😯. இவர்கள் பண பரிமாற்றத்தை குறித்து பேசிய அனைத்தும் தற்போது 📹வீடியோவில் பதிவாகியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. மொத்தத்தில் எம்.எல்.ஏ.க்களை 💸லஞ்சம் கொடுத்தும், மிரட்டியும் தான் சசிகலா அணியினர் வெற்றி பெற்றுள்ளனர் என்பது தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது😱.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬