தேசிய பளுதூக்கும்🏋 வீராங்கனைக்கு நேர்ந்த அவலம்😞

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

தேசிய பளுதூக்கும் வீராங்கனையான 👩ஹீனா உஸ்மானி, தனக்கு தொந்தரவு கொடுக்கும் நபரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தும் 👮போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று 😢கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார். உ.பி., மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் ஹீனா உஸ்மானி😯. இவர் தேசிய அளவில் பல பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்👍. இவரது வீட்டருகே வசிக்கும் 👨சஞ்சய் என்பவர், ஹீனா குறித்து, தொடர்ந்து மோசமான வார்த்தைகளால் திட்டி தொந்தரவு கொடுத்ததுடன், மிரட்டல் விடுத்துள்ளார்😱.
இது குறித்து ஹீனா தரப்பில் உள்ளூர் 👮போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை😳.இதனை தொடர்ந்து ஹீனா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆக்ரா நகர எஸ் எஸ்பி அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் அளித்தனர். இதுகுறித்து ஹீனா கூறியதாவது🎙,' சஞ்சய் மீது போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், அவர் எங்கள் மீது திருட்டு பழிப்போட்டு புகார் அளித்துள்ளார்' என்று 😢கண்ணீருடன் கூறினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬