💺முதல்வர் மற்றும் சபாநாயகரின் பேனர்கள் கிழிக்கப்பட்டது😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

அவினாசி வட்டாட்சியர் அலுவலகம் அருகே வைக்கப்பட்டிருந்த 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சபாநாயகர் தனபால் ஆகியோரது பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளது😱. அவிநாசியில் இன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறிய திருக்கோயில் அர்ச்சகர்களுக்கு பூஜை உபகரணங்கள் வழங்குதல் மற்றும் கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர் மசூதி திருக்கோயில்களுக்கு திருப்பணி 💸நிதியுதவி வழங்கும் விழா நடைபெறுகிறது🎉. இதனை அடுத்து, அவிநாசி அருகே முதல்வர் பழனிசாமி, சபாநாயகர் தனபால் ஆகியோரது படங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன😯. இந்த பேனர்களை சில மர்ம நபர்கள் கிழித்தெறிந்துள்ளனர்😱. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பேனர்களில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை மட்டும் கிழிக்காமல் விட்டு சென்றுள்ளனர்😕. இச்செயலை செய்தது யார்❓என்று 👮போலீசார் விசாரித்து வருகின்றனர்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬