🌱விவசாயி பிரச்சனை குறித்து விஜய் அதிரடி😡

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

அண்மையில் ஒரு விழாவில் கலந்துக்கொண்ட ⭐விஜய் விவசாயிகளின் பிரச்சனை குறித்து மேடையில் பேசியுள்ளார்🎙. அவர் கூறியது என்னவென்றால்🎙,"மூன்று வேளையும் உணவு நமக்கு கிடைப்பதால் ஒரு விவசாயின் கஷ்டம் நமக்கு தெரியவில்லை"என்று கூறினார்😯. மேலும், அவர் கூறுகையில்🎙, நாடு வல்லரசாவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் முதலில் விவசாயிகளுக்கு நல்லரசாக மாறவேண்டும் என்றும்👍 விவசாயிகள் பிரச்சனைக்கு அவசியமாக மட்டுமல்ல அவசரமாகவும் தீர்வு வேண்டும் என்றும் கூறினார்😠. தொடர்ந்து அவர் பேசுகையில்🎙, "நாம் இங்கு நன்றாக இருக்கிறோம். ஆனால் நமக்கு சோறு போடும் விவசாயிகள் நன்றாக இல்லை. அரிசியை உற்பத்தி செய்த விவசாயிகள் தற்போது அதே அரிசியை இலவசமாக பெற ரேஷன் கடையில் வரிசையில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது" என்று கூறினார். இதே நிலைமை தொடர்ந்தால் நமது அடுத்த சந்ததிக்கு உணவு இல்லாமல் போகக்கூடும் என்றும் அவர் கூறினார்🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬