ஒய்.ஜி.யின் 100வது நாடகத்தில் சிவகார்த்திகேயன்😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இளம் ஹீரோக்களுள் ஒருவர்👍. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரையும் தன் ரசிகராக கொண்ட நடிகர் இவர்🤗.இவர் சமீபத்தில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நடத்திய 100வது நாடகத்தின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்😯. சிவகார்த்திகேயன் உடன் இயக்குநர் 🎬பாக்யராஜ், தம்பி ராமையா, காமெடி நடிகர் சதீஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்🙂.
நாடகம் முடிந்த பின்பு பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்🎙,"சினிமாவில் நடிகர், நடிகைகள் பலரும் கொடிக்கட்டி பறக்க காரணம் நாடகங்கள் தான். நாடகத்தில் இருந்து வந்தவர்கள் தான் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கின்றனர். அசாத்திய திறமை கொண்ட இவர்கள் அருகில் அமரவே கூச்சமாகவும், வெட்கமாகவும் உள்ளது".என்று தன்னடக்கத்துடன் நாடக நடிகர்கள் குறித்து புகழ்ந்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬