🏦வங்கியில் 30 லாக்கர்களை உடைத்து கொள்ளை😱

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🏦வங்கியின் சுவற்றில் துளையிட்டு 30 லாக்கர்களை உடைத்து கோடிக்கணக்கான 💸பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது😱. உத்தரபிரதேச மாநிலம் மோடிநகரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு பின்னே அலுவலகம் ஒன்று செயல்பட்டு வந்து உள்ளது😯. அந்த அலுவலகம் வழியாக பொது சுவரில் துளையிட்டு கொள்ளையர்கள் இச்செயலை செய்துள்ளனர்😳. இந்த சம்பவம் குறித்து வங்கியில் உள்ளவர்களுக்கு நேற்று காலை 9.30 மணியளவில் தெரியவந்துள்ளது😒.மேலும் மற்ற லாக்கர்களையும் உடைக்கும் முயற்சிகளை கொள்ளையர்கள் மேற்கொண்டுள்ளார்கள் என்பது தெரிகிறது. இதனை அடுத்து 👮போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது🔈.இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காசியாபாத் 👮போலீஸ் மற்றும் தடயவியல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்👍. போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. கொள்ளையர்கள் சுவரை துளையிட, லாக்கர்களை உடைக்க பயன்படுத்திய பொருட்களை 👮போலீஸ் பறிமுதல் செய்து உள்ளது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬