💃ஸ்ரீ தேவியின் 50வது ஆண்டு விழாவில் ⭐ரஜினி, கமல்😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

💃ஸ்ரீ தேவியின் 50வது ஆண்டு விழா கொண்டாடப்படவுள்ளது🎉. இந்த விழாவிற்கு வருமாறு ரஜினி மற்றும் கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது🤗. 1967ம் ஆண்டு சினிமாவில் 🎥'துணைவன்' என்னும் படத்தில் அறிமுகமான ஸ்ரீ தேவி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் நம்பர்1⃣ நடிகையாக வலம் வந்தவர்👍. அவர் தற்போது நடித்திருக்கும் படம் 🎥‘மாம்’. இந்தப் படம் ஸ்ரீதேவியின் 300வது படம். இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. ஸ்ரீதேவியின் இந்த சாதனையை, மிகப்பெரிய விழாவாகக் கொண்டாட இருக்கிறார் கணவர் போனி கபூர்👌. இந்த விழாவில் கலந்துகொள்ள, ஸ்ரீதேவியுடன் நடித்த ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. நிச்சயமாக இந்த விழாவில் இவர்கள் இருவரும் கலந்து கொள்வார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬