நித்யானந்தா மீது கைது நடவடிக்கை⛓-நீதிமன்றம் எச்சரிக்கை⚠

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

மதுரை ஆதீனத்தின் 293வது இளைய மடாதிபதி விவகாரத்தில் பிப்ரவரி 2ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்யப்படாவிட்டால் கைது⛓ உத்தரவு பிறப்பிக்க நேரிடும்😳 என்று நித்யானந்தாவிற்கு சென்னை 🏛உயா்நீதிமன்றம் எச்சரிக்கை⚠ விடுத்துள்ளது😳. மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைவதற்கும், மடத்தின் நிா்வாகத்தில் தலையிடவும் நித்யானந்தாவிற்கு தடைவிதித்து🚫 உத்தரவிட⚖ வேண்டும் என்று மதுரையை சோ்ந்த ஜெகதலபிரதாபன் 🏛உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடா்ந்திருந்தாா்😯. இதில் பதில் மனு📜 அளித்த நித்தியானந்தம் தான் மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனம் என்றும்😠, ஒரு முறை ஆதீனமாக பொறுப்பேற்று கொண்டால் அவர் தனது வாழ்நாள் வரை ஆதினமாகவே கருதப்படுவார்😳 என்றும் இதனை எந்த நீதிமன்றமும் மறுக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார்😳.
இதனை விசாரித்த 🏛நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் ஆதினராக இருக்க கூடாது🚫 என்று தெரிவித்தது👍. மேலும் தனது பதிவியினை நீக்கி🚫 விட்டு ஜனவரி 3ம் தேதிக்குள் பதில் மனு📜 தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டது⚖. இந்நிலையில் பதில்மனு📜 தாக்கல் செய்ய கூடுதலாக 4 வார காலம் அவகாசம் வேண்டும் என்று நித்யானந்த தரப்பில் கோரப்பட்டது🙏. இதனை ஏற்றுக் கொள்ளாத நீதிபதி நித்யானந்தாவை இன்று மாலைக்குள் கைது⛓ செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டாா்⚖. அப்போது குறுக்கிட்ட நித்யானந்தா வழக்கறிஞா் இறுதி அவகாசமாக சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்😯. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிப்ரவரி 2ம் தேதிக்குள் பதில் மனு📜 தாக்கல் செய்ய வேண்டும் என்றும்😯, தவறும் பட்சத்தில் கைது⛓ உத்தரவு⚖ பிறப்பிக்க நேரிடும் என்று தெரிவித்து🔈 அடுத்த விசாரணையை 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬