🚌போக்குவரத்து கழகத்தின் செலவு 90%-மாக உயர்வு😱-விளக்கமளிக்கும் 💺எடப்பாடி🎙

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

பேருந்து 💸கட்டண உயர்விற்கு 🚌போக்குவரத்து கழகத்தின் செலவு 90%-மாக உயர்ந்ததே காரணம் என்று முதல்வர் 💺எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்🎙 அளித்துள்ளார்👍. இது குறித்து 📰செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறுகையில்🎙, "போக்குவரத்து கழகத்துக்கு 2011-ம் ஆண்டில் ரூ.3,392 கோடி கடன் இருந்தது. போக்குவரத்து கழகத்தின் 112 சொத்துக்கள் அடமானம் வைக்கப்பட்டு இருந்தன. கடன்சுமையை அரசே தாங்கிக்கொண்டு பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை" என்றும்😳, 'பெட்ரோல், டீசல் ரூ.43ல் இருந்து ரூ.67-ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது' என்றும் தெரிவித்துள்ளார்🔈.
மேலும் புதிய 🚌பேருந்தின் விலை, உதிரி பாகங்கள் விலையும் அதிகரித்து விட்டது🙄 என்று கூறிய அவர், மேலே கொடுக்கப்பட்டுள்ள காரணங்களினால் 🚌வரத்து கழக செலவு 90 சதவீதம் உயர்ந்துவிட்டது😱 என்று கூறியுள்ளார்😯. மேலும் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிக அளவில் 🏛அரசுப் 🚌பேருந்துகள் இயக்கப்படுகிறது😳 என்றும் 🚌போக்குவரத்து கழகத்துக்கு நாளொன்றுக்கு 💸ரூ.12 கோடி இழப்பு ஏற்படுகிறது என்றும் 💺முதல்வர் குறிப்பிட்டார்😯. இதனால் போக்குவரத்து கழகத்துக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது😟 என்று கூறினார். தற்போது தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தான் 🚌பேருந்து 💸கட்டணம் உயர்த்தப்பட்டது😳 என்று அவர் விளக்கம்🎙 அளித்துள்ளார்😯 என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬