🚌பேருந்து 💸கட்டண உயர்வு விவகாரம்😳-ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் கைது⛓

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🚌பேருந்து 💸கட்டண உயர்வினை முழுமையாகத் திரும்பப்பெற வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கைது⛓ செய்யப்பட்டனர்😳. தமிழகம் முழுவதும் ஜனவரி 20ஆம் தேதி முதல் 🚌பேருந்துக் 💸கட்டண உயர்வு அமலானது. இதற்கு எதிர்ப்பு🚫 தெரிவித்து பொது மக்கள் உட்பட பல அரசியல்வாதிகளும் போராட்டங்களை நடத்தினர்😰. அதன் பின், கட்டணத்தை சிறிதளவில் தமிழக 🏛அரசு குறைத்து, அது இன்று முதல் அமலுக்கும் வந்ததது👍.
ஆனால், 💸கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப்பெற வலியுறுத்தி இன்று சென்னை கொளத்தூரில் அத்தொகுதி எம்எல்ஏ ஆன திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது🙄. இதில் காங்கிரஸ், திராவிடர் கழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் பங்கேற்றன😯. சாலையில் சுமார் 6 அரசுப் 🚌பேருந்துகளை மறித்து🚫 அதன் மீது ஏறி நின்று திமுகவினர் முழக்கமிட்டனர்🔈. அதனை அடுத்து 👮போலீசார் ஸ்டாலின் உட்பட அனைவரையும் கைது⛓ செய்துள்ளனர்😳. அதே போல் சிந்தாரிப்பேட்டை பகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது😳. இதில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் இணைந்துள்ளன😯. இந்தப் போராட்டத்தில் வைகோ, திருமாளவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டவர்கள் கைது⛓ செய்யப்பட்டனர்😱.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬